இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பெயர் உண்டு, அப்பெயர் நம் பெற்றோர் ,உறவினர் வைத்த பெயர் ,அது சமூகம், மொழி,போன்ற பொதுவான காரணங்களால் வரையறுக்கப்படுகின்றன.
எனக்கு ஏன் இந்த பெயர்?
சிலருக்கு தன் பெற்றோர் வைத்த பெயர்
பிடிக்காமல் அதை குறுக்கியோ அல்லது வேறு பெயராலோ தங்களை அழைக்குமாறு கூறுவர் ஏன் அந்த
தாழ்ந்த எண்ணம் ,
தானாய்
வருவதல்ல பழக்கம் , சுற்றம் பார்த்து வருவதே பழக்கம் ,
நண்பர்
கூட்டத்தில் பலரும் கெத்தான பெயர் வைத்துள்ளார்கள் என்ற எண்ணம் , அதுவல்ல இங்கு பிரச்சனை
கேலிக்குள்ளாக்கப்படுவோம் என்ற எண்ணமே இதற்கு காரணம்
சிலர்
தங்களுக்கு சிறப்பு பெயர் (புனை பெயர்) வைத்துக்கொள்வார்கள் அது அவர்களின் விருப்பமாயின்
தவறல்ல ,கேலிசெய்வார்கள் என்று எண்ணி சிலர் மனமுடைந்து போவதே தவறு
குண்டா கருப்பா நோஞ்சானா ?
ஒருவரின் உடல்வாகை பொறுத்து சுற்றம் கொடுக்கும்
பட்டம் நோஞ்சான்,குண்டுப்பூசணி,கருவாயன் இன்னும் பல இவைகளெல்லாம் பெயர்களா இல்லை இல்லை
இவை நம்முன்னேற்றத்தை தடுக்கும் கற்கள்
ஒருவரின் உடல்வாகு ஒருவரின் வளர்ச்சியை தீர்மானிக்காது இவைகளை பெயர்களாக கருதி மனமுடைந்து நின்ற இடத்திலே நிற்பது பலரின் வாடிக்கை
கருப்போ வெள்ளையோ, குண்டோ ஒல்லியோ ,நெட்டையோ குட்டையோ எல்லோருக்கும் ஒரே அளவு மூளைதான். நான் கருப்பா இருக்கிறேன் “ஆப்பிரிக்கா மக்களில் சாதனையாளர்கள் இல்லையா” “நான் குட்டையாய் இருக்கிறேன். “சைனா மக்களில் சாதனையாளர்கள் இல்லையா” ஒல்லியாய் இருக்கிறேன் நோஞ்சானாய் இருக்கிறேன் மற்றவர் செய்யமுடியாத விசயங்களை உங்களால் செய்யமுடியுமே “கேலிப்பேச்சுகள் உங்கள் பெயர்கள் அல்ல அவை முன்னேற்றத்தை தடுக்கும் கற்களே அதை தூக்கி தூர வீசுங்கள் முடியவில்லையா அதன் மீது ஏறிநடங்கள்”.
எனக்கு என்ன பெயர்?
பெயர் ஒருவரின் வாழ்வை தீர்மானிக்காது சுந்தர் பிச்சை(google ceo) என பெயர் வைத்ததால் அவர் ஏழ்மை ஆனவர் என்று அர்த்தமா இல்லை அது பெயர் மட்டுமே அவர் உயர்ந்த இடத்தில இருப்பதற்கு காரணம் அவரின் உழைப்பு மற்றும் விடாமுயற்சி.
நம் பெயர் எதுவாக இருந்தாலும் நம் பண்பு பழக்கவழக்கம் விடாமுயற்சி உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்துமே தவிர நம்முடைய பெயர் இதற்குகாரணமல்ல முக்கியமாக கேலியாக நம்மை அழைக்கும் பெயர்கள் நமக்கு வாழ்வின் படிகளை கட்ட உதவும் கற்களே சுற்றம் நம்மை எவ்வாறு அழைத்தாலும் மனமுடையாது தொடர்ந்து முன்னேறுங்கள்.
அன்புடன்
மகிழ்


Comments
Post a Comment