Skip to main content

Posts

Showing posts from July, 2021

எனக்கு என்ன பெயர் ?

          இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பெயர் உண்டு, அப்பெயர் நம் பெற்றோர் ,உறவினர் வைத்த பெயர் ,அது சமூகம், மொழி,போன்ற பொதுவான காரணங்களால் வரையறுக்கப்படுகின்றன. எனக்கு ஏன் இந்த பெயர்?                 சிலருக்கு தன் பெற்றோர் வைத்த பெயர் பிடிக்காமல் அதை குறுக்கியோ அல்லது வேறு பெயராலோ தங்களை அழைக்குமாறு கூறுவர் ஏன் அந்த தாழ்ந்த எண்ணம் , தானாய் வருவதல்ல பழக்கம் , சுற்றம் பார்த்து வருவதே பழக்கம் , நண்பர் கூட்டத்தில் பலரும் கெத்தான பெயர் வைத்துள்ளார்கள் என்ற எண்ணம் , அதுவல்ல இங்கு பிரச்சனை கேலிக்குள்ளாக்கப்படுவோம் என்ற எண்ணமே இதற்கு காரணம் சிலர் தங்களுக்கு சிறப்பு பெயர் (புனை பெயர்) வைத்துக்கொள்வார்கள் அது அவர்களின் விருப்பமாயின் தவறல்ல ,கேலிசெய்வார்கள் என்று எண்ணி சிலர் மனமுடைந்து போவதே தவறு குண்டா கருப்பா நோஞ்சானா ?          ஒருவரின் உடல்வாகை பொறுத்து சுற்றம் கொடுக்கும் பட்டம் நோஞ்சான்,குண்டுப்பூசணி,கருவாயன் இன்னும் பல...